search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ராணுவம்"

    • இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
    • நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

    ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் ஆகியவற்றை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

    இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனந்த்நாக் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    #JKEncounter #MilitantsKilled
    இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும் கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அனுப்பிய சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #UGC #SurgicalStrikeDay
    புதுடெல்லி:

    2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம்,  அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அளித்தது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், வரும் 29-ம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு முன்னர் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அன்றைய தினம், என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

    இந்த சுற்றறிக்கை சர்ச்சையை உண்டாக்கியது. நாட்டின் ராணுவத்தின் செயல்பாட்டை அரசியலாக்கும் நடவடிக்கை இது என விமர்சனங்கள் எழுந்தன. தன்னாட்சி அமைப்பான யூஜிசி இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியது கிடையாது என காங்கிரஸ், திரினாமுல் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், இந்த சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ள மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “சர்ஜிகல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட வேண்டும் என எந்த கல்லூரியையும் வற்புறுத்தவில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றே நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன” என கூறியுள்ளார்.
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் இன்று கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றும் அவுரங்சீப் எனும் ராணுவ வீரர், பயங்கரவாதிகளால் இன்று கடத்தி செல்லப்பட்டதாக ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. 

    காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை துப்பாக்கிமுனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். 

    ராணுவ வீரர் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஹெலிகாப்டர்கள் உட்பட பல கருவிகளை இந்தியா வாங்க உள்ளது. #Apache
    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்புத்துறையின் பலத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட தாக்குதல் நடத்த உதவும் வகையில் ஹெலிகாப்டர்கள் வாங்க அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி அமெரிக்காவிடம் இதுகுறித்து கோரிக்கை விடப்பட்டது. இந்தியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தவும், தெற்காசியாவின் அமைதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் நிலைபாட்டை அதிகரிக்கவும் உதவ வேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தது.

    அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ராணுவம், 6 புதிய ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்க முன்வந்துள்ளது. அதிக செலவில் புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. அதனை பாதுகாப்பு துறை நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதே போல், நான்கு தீயை கட்டுப்படுத்தும் ரேடார், மிசல்ஸ், ஜிபிஎஸ் சிஸ்டம்ஸ், கனான்ஸ், டிரான்பாண்ட்ர்ஸ், சிமுலேட்டர்ஸ் மற்றும் பயிற்சி உபகரணங்கள் உட்பட பல பொருட்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மொத்த செலவு 930 மில்லியன் டாலர் ஆகும். #Apache

    மேஜர் லீதுல் கோகாய் மீதான வழக்கில் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என ராணுவம் இன்று உத்தரவிட்டுள்ளது. #LeetulGogoi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகாய் அங்குள்ள இளைஞரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஓட்டல் நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை அடுத்து, கோகாய் மற்றும் அவரது டிரைவர் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

    பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், கோகாயை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், லீதுல் கோகாய் மீதான வழக்கில் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. #LeetulGogoi
    ×